குஷ்பூ கூட அது நடிக்கவே நடிக்காது!! இளம் நடிகை முன்பே ஓப்பனாக பேசிய இயக்குநர் சுந்தர் சி..
சுந்தர் சி Gangers
தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குநராக திகழ்ந்து வரும் இயக்குநர் சுந்தர் சி மதகதராஜா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின் கேங்கர்ஸ் என்ற படத்தினை இயக்கி நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு பின் வைகைப்புயல் வடிவேலுவுடன் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் சுந்தர் சி கலந்து கொண்டு பேட்டியளித்து வருகிறார்.
சமீபத்தில் கதாநாயகி கேத்ரின் தெரேசாவுடன் இணைந்து அளித்த பேட்டியொன்றில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், அநேகமாக சங்கமித்ரா படம் அடுத்த வருடம் ஆரம்பிக்கும் என்று முடிவில் இருக்கிறேன் என்னோட கமிட்மெண்ட் எல்லாம் முடித்துவிட்டு அதை ஆரம்பிப்பேன்.
குஷ்பூ கூட
இதைத்தான் மதகதராஜா 2 படம் தள்ளிக்கொண்டே வருகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய சுந்தர் சி-யிடம் நீங்களும் குஷ்பூ மேடமும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வருக்கிறதா, அதற்கான ஸ்கிரிப்ட் வருகிறதா என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அது எப்பவுமே கிடையாது, நாங்கள் ஆரம்பத்திலேயே சேர்ந்து முடிவு பண்ண விஷயம். ஏன், இருவரும் சேர்ந்து பேட்டி கூட கொடுத்தது கிடையாது. ஒன்னு வாங்குனா ரெண்டு இலவசமா என்று தோன்றும் அதனால் வேண்டாம் என்று சுந்தர் சி ஓப்பனாக பேசியிருக்கிறார்.