கர்ப்பமாகி உடல் எடை ஏறிய சுந்தரி சீர்யல் நடிகை கேப்ரியல்லா!! புகைபடங்கள்...
கேப்ரியல்லா
சின்னத்திரை மூலம் பிரபலமாகி தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் கலைஞர்களில் ஒருவர் நடிகை கேப்ரியல்லா செல்லஸ். விஜய் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமான கேப்ரியல்லா, அதன்பின் மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்.
இதனை தொடர்ந்து ஐரா, N4, செத்தும் ஆயிரம் பொன், கருப்புதுரை போன்ற படங்களில் நடித்தும் வந்தார். அதன்பின் சன் டிவியில் 2021ல் துவங்கப்பட்ட சுந்தரி சீரியலில் முக்கிய ரோலில் நடிக்க ஆரம்பித்தார்.
1144 எபிசோட்டிற்கு பின் சீரியல் முடிந்த நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். சீரியலில் இருந்து தற்போது விலகி கர்ப்பகாலத்தை சொந்த ஊரில் செலவிட்டு வருகிறார்.
இடையில் கர்ப்பகால புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் எடுத்து வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த பலர், என்ன கேப்ரியல்லா எடை போட்டுவிட்டீர்களே என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.