சின்னத்திரை சுந்தரி சீரியல் துணை நடிகை மீனா கைது..

Serials Sundari Tamil Actress Actress
By Edward Nov 09, 2024 11:57 AM GMT
Report

சின்னத்திரை துணை நடிகை

தமிழகத்தில் சமீபகாலமாக போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ள நிலையில் அதை ஒழிக்கும் முயற்சியில் தமிழக அரசும் பல சோதனைகளை செய்து வருகிறார்கள்.

போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு கல்லூரிகளில் விற்கப்பட்டு வருவதை அடுத்து சமீபத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

சின்னத்திரை சுந்தரி சீரியல் துணை நடிகை மீனா கைது.. | Sundari Serial Actress Meena Arrest

கைது

மேலும் இவ்வழக்கில் சீரியல் நடிகை ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை மீனா என்பவர் சுந்தரி சீரியலில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.

சிறுசிறு ரோலில் நடித்து வரும் நடிகை மீனா, சின்னத்திரை நடிகைகள் மற்றும் துணை நடிகைகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் ராயப்பேட்டை அருகே போதைப்பொருளுடன் சிக்கியதால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.