ஒரு பொண்ண எப்படி இப்படி பேசுவ, யாரு நீ!! பதிலடி கொடுத்த சூப்பர் சிங்கர் 11 தவசீலி..
சூப்பர் சிங்கர் 11 தவசீலி
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் சூப்பர் சிங்கர். சமீபத்தில் இந்நிகழ்ச்சியின் சூப்பர் சிங்கர் சீனியர் 11 நடந்து முடிந்தது. அதில் 22 வயதான சென்னையை சேர்ந்த தவசீலி தங்கராஜ் என்ற போட்டியாளர் கலந்து கொண்டு தன்னுடைய குரலாமும் பாடும் விதத்தாலும் பலரது கவனத்தை பெற்றார்.

அவர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தன்னைப்பற்றி தவறாக பேசுபவர்களின் மனநிலை குறித்து பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
ஒரு பொண்ண எப்படி இப்படி பேசுவ
அதில், ஆரம்பத்தில் நல்லாதான் போச்சு, வரவர நீ பண்றது பிடிக்கல என்று கூறுபவர்கள் என்ன பதிலளிக்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு தவசீலி, இதுக்கு நான் எப்படி ரிப்ளே செய்வது, ஆரம்பத்தில் இருந்து நான் இப்படியே தான் இருக்கிறேன்.

அவர்களுக்கு எந்தவிதத்தில் பாதித்தது என்றே தெரியவில்லை, இதற்கு நான் என்ன சொல்றது என்று பதிலளித்தார். மேலும், பொண்ணை நல்லா வளர்த்துக்கமா, சீன் போடுறா இவ என்று கூறுபவர்களுக்கு, சத்தியமாக நான் இப்படித்தான் இருப்பேன். ஆஃப் கேமராவில் எப்படியோ அப்படித்தான், ஆடிட்டே இருப்பேன் ரோட்டில் கூட ஆடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், நான் பார்த்ததிலேயே மோசமான கெமெண்ட் என்றால், நான் பாடும் பாட்டை வைத்து என்னுடைய கேரக்டரை கேவளமாக பேசுவார்கள். அவர்களுக்கு என்னை பற்றி ஒன்னும் தெரியாது, ஒரு பொண்ணை எப்படி இப்படி பேசுவ, யாரு நீ என்று தான் இருக்கும், கஷ்டமா இருக்கும் என்றும் அதன்பின் பழகிபோய்விட்டது என்று தவசீலி தெரிவித்துள்ளார்.