சூப்பர் சிங்கர் பிரகதியா இது! அடையாளமே தெரியாத அளவிற்கு ஆளே மாறிட்டாங்களே..
பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். தற்போது சீனியர் சூப்பர் சிங்கர் 9 சீசன் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. அந்தவகையில் ஜூனியர் சீசன் 3ல் போட்டியாளராக சிங்கப்பூர் வாழ் தமிழ் பெண்ணாக கலந்து கொண்டவர் பிரகதி குருபிரசாத்.
2012ல் நடந்த சூப்பர் சிங்கர் 3 சீசனில் கலந்து கொண்டு ரன்னர் அப் இடத்தினை பெற்று பிரபலமானார். அதன்பின் அடுத்த ஆண்டே பரதேசி, வணக்கம் சென்னை உள்ளிட்ட பல படங்களின் பாடல்களை பாடி அசத்தினார்.

சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா, அனிருத், ஜிப்ரான், உள்ளிட்ட பல இசையமைப்பாளர்கள் இசையில் பாடியிருக்கிறார் பிரகதி. தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் பிரகதி மாடலிங் துறையிலும் ஆர்வம் கொண்டு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார்.
சமீபகாலமாக கிளாமர் மற்றும் பிகினி ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
தற்போது 25 வயதாகும் பிரகதி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி போட்டோஷூட்டில் கலக்கியுள்ளார். அவரின் ரீல்ஸ் வீடியோவை பார்த்து ரசிகர்கல் சூப்பர் சிங்கர் பிரகதியா என்று ஷாக்காகி வருகிறார்கள்.


