நம்ம சூப்பர் சிங்கர் ஜூனியர் அல்கா அஜித்தா இது? அடையாளமே தெரியாமல் இப்படியாகிட்டாங்களே..
பிரபல தொலைக்காட்சி சேனலில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஜூனியர், சீனியர், சாம்பியன்ஸ் என பலவிதத்தில் நடைபெற்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
நாட்டுபுறம், கிராமத்திய பாடல் என அனைத்து பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு முன்னணி பாடகர்கள் நடுவர்களாக பணியாற்றியும் வருகிறார்கள். அப்படி போட்டியாளர்களாக களம் கண்ட பலர் சினிமாவில் ஒரு நல்ல இடத்தினை பிடித்து வருகிறார்கள்.
அந்தவரிசையில் சூப்பர் சிங்கர் 2 ஜூனியர் சீசன் 2009ல் நடைபெற்ற நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பட்டத்தை கைப்பற்றியவர் அல்கா அஜித். மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த அல்கா 25 மதிப்புள்ள வீட்டினை பர்சாக பெற்று மலையாள பாடகியாக களம் கண்டு வருகிறார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு முன்பே 500 மேடைகளில் 5000 பாடல்களுக்கும் மேல் பாடி அசத்தியவர். மீபத்தில் என்னோட சென்னை என்ற ஆல்பம் பாடலுக்கு பாடகர் அந்தோனிதாசனுடன் இணைந்து பாடியுள்ளார்.ராஜா ராணி படத்தில் கூட சில்லென ஒரு சிரிப்பிலே என்ற பாடலையும் பாடியிருக்கிறார்.
தற்போது 26 வயதாகும் அல்கா அஜித் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அல்கா அஜித்தா இது என்று ஷாக்காகி வருகிறார்கள். மேலும் சமீபத்தில் ந்டத்தப்பட்ட கச்சேரி வீடியோவில் கலந்து கொண்டு பாடிய வீடியோவும் இணையத்தில் பகிர்ந்து வைரலாகி வருகிறது.



