28 வயதான சூப்பர் சிங்கர் அல்கா அஜித்-ஆ இது!! குண்டாகி அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே..
பிரபல தொலைக்காட்சி சேனலான ஸ்டார் விஜய்யின் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். சீனியர், ஜூனியர், சாம்பியன்ஸ் என்ற பல பரிமானங்களில் நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி மூலம் பலர் வெள்ளித்திரையில் பிரபலமாகி வருகிறார்கள்.
அந்தவரிசையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 சீசனில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராகியவர் அல்கா அஜித். ஏழைக்குடும்பத்தில் இருந்து வந்த அல்கா அஜித் சமீபத்தில் கல்லூரி வாழ்க்கையில் நான் மிகவும் சந்தோஷாமாக வாழ்ந்து வருவதாகவும் சென்னையில் தான் வசித்து வருவதாகவும் கூறியிருந்தார்.
சூப்பர் சிங்கருக்கு பின் பல படங்களில் பாடிய அல்கா அஜித் தற்போது 27 வயதாகியும் வாய்ப்புகள் கிடைக்காமல் யூடியூப் சமுகவலைத்தளம் மூலம் தன் திறமையை காட்டி வருகிறார்.தற்போது நடிகர் ஜெயராமை நேரில் சந்தித்திருக்கிறார்.
அங்கு எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார் அல்க அஜித். புகைப்படத்தில் அல்கா அஜித் குண்டாக மாறி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருப்பதை ரசிகர்கள் பார்த்து ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.