சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 Finalist!! இந்த சீசனிலும் ஒரு ஆண் போட்டியாளர் கூட இல்லை..
சூப்பர் சிங்கர் ஜூனியர் 10
விஜய் தொலைக்காட்சியில் பாப்புலர் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி. விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் தற்போது ஜுனியருக்கான 10வது சீசன் நடைபெற்று வருகிறது.
பிரியங்காவும் மாகாபா ஆனந்தும் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வருகிறார்கள். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டில் போட்டியாளர்கள் பாடல்கள் பாடி வர தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.
5 பைனலிஸ்ட்
இதில், ஆத்யா, சாரா ஸ்ருதி, நஸ்ரின், லைனட், காயத்ரி ஆகிய 5 பேர் இறுதி சுற்று போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். இந்த வார எபிசோட்டில் 5 பைனலிஸ்ட்டும் ப்ரீ பைனல் ரவுண்டில் பாடவுள்ளனர்.
இந்நிலையில், இந்த சீசனில் ஒரு ஆண் போட்டியாளர்கள் கூட இறுதி சுற்று போட்டிக்கு தேர்வாகவில்லை. கடந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 நிகழ்ச்சியிலும் Finalist-ஆக ஒரு ஆண் போட்டியாளர் கூட தேர்வாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.