சூப்பர் சிங்கர் ஜூனியர் 10!! 5வது இறுதிசுற்று போட்டியாளர் யார்? பிரமோ வீடியோ...
சூப்பர் சிங்கர் ஜூனியர் 10
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பிரியங்காவும் மாகாபா ஆனந்தும் நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டு வருகிறார்கள்.
இப்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் 10ன் இறுதி சுற்று போட்டியாளர்கள் யார் என்பதை தேர்வு செய்யும் போட்டி நடந்துக் கொண்டிருக்கிறது.
அந்தவகையில் இதுவரை ஆத்யா, சாரா சுருதி, நஸ்ரின், லைனட் உள்ளிட்ட 4 பேர் இறுதி சுற்று போட்டிக்கான தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தவாரம் வைல்ட் கார்ட் ரவுண்ட் நடைபெற்றுள்ளது.
5வது இறுதிசுற்று போட்டியாளர்
அதில் சிறப்பாக பாடியவர்களில் ஒருவர் தான் 5வது இறுதி சுற்றுப்போட்டியாளராக தேர்வு செய்யப்படுவார்கள்.
அந்தவகையில் வைல்ட் கார்ட் ரவுண்ட் மூலம் காயத்ரி தான் 5வது ஃபைனலிஸ்ட் ஆக தேர்வு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் ஆசையில் இதுவாகத்தான் இருப்பதாக சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.