சிங்கர்லாம் வேண்டாம் அதுக்கும் மேல!! சூப்பர் சிங்கர் பிரியங்காவின் மெய்சிளிர்க்க வைத்த புதிய ஒருநிமிட பாடல்
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பு செய்யப்படும் நிகழ்ச்சி என்றால் அது சூப்பர் சிங்கர் தான். இந்நிகழ்ச்சியால் பலர் சினிமாத்துறையில் நல்ல இடத்தினை பிடித்து வருகிறார்கள்.
அதில் ஒருவராக இருப்பவர் பிரியங்கா. டைட்டில் பெறாவிட்டாலும் அவர் பாடிய பாடலான சின்ன சின்ன வண்ணக்குயில் பாடல் இன்னும் மக்கள் மனதில் இருந்து கொண்டிருக்கிறது. அப்பாடலை எங்கு சென்றாலும் பிரியங்கா பாடாமல் வரவே மாட்டார்.
அப்பாடலை ஒருமுறை மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியனுடனும் கச்சேரி நிகழ்ச்சி ஒன்றில் சேர்ந்து பாடியுள்ளார் பிரியங்கா. சிங்கரை தவிர்த்து பல் டாக்டராக இருக்கும் பிரியங்கா கிடைக்கும் நேரத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்.
தற்போது போட்டோஷூட் பக்கமும் சென்று புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது எல்லோரும் வெளியிட்டு வரும் ஒரு நிமிட பாடல்களையே மிஞ்சும் அளவிற்கு அவரது குரலில் பாடி அசத்தி இருக்கிறார்.