பாடகி ராஜலட்சுமிக்கு இவ்வளவு கடனா? விரக்தியில் எடுத்த அதிர்ச்சி முடிவு
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தான் ராஜலட்சுமி. இதையடுத்து இவருக்கு பல படங்களில் பாடுவதற்கு வாய்ப்புகள் குவிந்தது.
குறுகிய காலத்திலேயே பிரபலமான ராஜலட்சுமி தற்போது திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இவர் நடித்துள்ள லைசன்ஸ் என்ற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராஜலட்சுமி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், நாங்கள் அதிகமாக சம்பாதித்துவிட்டோம் என்று பலரும் கூறி வருகின்றனர். உண்மையில் நாங்கள் கொரோன காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டோம்.
நாங்கள் வீடு கார் எல்லாமே லோன் மூலமாக தான் வாங்கினோம். கடனை அடைப்பதற்காக பணம் இல்லாமல் அவதிப்பட்டோம் என்று ராஜலட்சுமி பேட்டியில் கூறியுள்ளார்.
நான் ஒருமுறை என் கணவரிடம் மீண்டும் கொரோனா காலம் மாதிரி வந்தால் என்ன செய்வது என்று கேட்டேன்.
அதற்கு அவர், நாம் மீண்டும் நம்முடைய கிராமத்துக்கே போய்விடலாம் என்று கூறினாராம்.