கணவருடன் சாமி சாமீன்னு ரோட்டுக்கு வந்து பாடிய சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி! எதுக்கு தெரியுமா?
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி ஜோடி. இருவரும் போட்டியாளர்களாக களம் கண்டு நாட்டுப்புறப் பாடலை பெருமைப்படுத்தி பாடி வந்தனர்.
செந்தில் டைட்டிலை கைப்பற்றி சில படங்களில் மனைவியுடன் சேர்ந்து பாடி வருகிறார். சமீபத்தில் ராஜலட்சுமி தெலுங்கு தமிழ் டப் படமான புஷ்பா படத்தில் சாமீ வாயா சாமீ பாடலை பாடி அசைத்தியுள்ளார்.
இந்நிலையில் கச்சேரிகளில் கலந்து கொண்டு பாடி வரும் இருவரும் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தலில் திண்டுக்கல்லில் சுயேட்ச்சையாக போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பல பாடல்களை பாடி கவர்ந்து வாக்கு சேகரித்து வந்தபோது ராஜலட்சுமி சாமீ வாயா சாமீ பாடலையும் பாடியுள்ளார். அந்த வீடியோவை பார்த்து பலர் இப்படி இறங்கிட்டீங்களே ராஜலட்சுமி என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.