சூப்பர் சிங்கர் 11-ல் இந்த வாரம் பிரியங்கா கிடையாது!! மாகாபாவுடன் இந்த தொகுப்பாளினி தான்...
சூப்பர் சிங்கர் 11
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளின் 20வது சீசனை ஆரம்பித்துள்ளனர்.
சூப்பர் சிங்கர் சீனியரின் 11வது சீசன் தற்போது துவங்கி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த நிகழ்ச்சியையும் மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தான் தொகுத்து வழங்கி வந்தனர்.
பிரியங்கா கிடையாது
இந்நிலையில் சமீபத்தில் பிரியங்காவிற்கு திருமணமாகி அவரது கணவர் வசி, லண்டனில் வசித்து வருகிறார். திருமணத்திற்கு பின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் அதன்பின் கணவரை சந்திக்க லண்டன் சென்றும் வருகிறார்.
இதனால் தன் கணவருடன் நேரத்தை செலவிட்டுள்ளதாக, வரும் வாரம் ஒளிப்பரப்பாகவுள்ள சூப்பர் சிங்கர் சீசன் 11 நிகழ்ச்சியில் இருந்து விலகியிருக்கிறார் பிரியங்கா.
அவருக்கு பதில், சூப்பர் சிங்கர் பக்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி அக்ஷிதா தாஸ் மாகாபா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கியுள்ளார்.