சூப்பர் சிங்கர் சிவாங்கியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா, அடேங்கப்பா இவ்வளவா
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சிவாங்கி கிருஷ்ணகுமார். இதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எண்ட்ரி கொடுத்து தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
கோமாளியாக கலக்கிக்கொண்டிருந்த இவர், நான்காவது சீனனில் குக் ஆக களமிறங்கினார். இதை தொடர்ந்து வடிவேலுவின் நாய் சேகர் returns, சிவகார்த்திகேயனின் டான் ஆகிய படங்களில் நடித்தார்.
மேலும் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நானும் ரவுடி தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், ரசிகர்களின் மனதில் நல்ல பாடகியாக இடம்பிடித்துள்ள சிவாங்கியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, சிவாங்கி கிருஷ்ணகுமார் பாடகியாக, நடிகையாக சம்பாதிப்பது மட்டுமின்றி இசை கச்சேரிகள் மற்றும் youtube சேனல் மூலமாகவும் அதிகம் சம்பாதிக்கிறார் என தகவல் கூறுகின்றனர். இதனால் சிவாங்கியின் சொத்து மதிப்பு (Net Worth) சுமார் ரூ. 1 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.