சூப்பர் சிங்கர் சிவாங்கியா இது! சேலையில் வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் சிவாங்கி. 7வது சீசனில் கலந்து கொண்டார் சிவாங்கி. தன் குரலுக்கு பாட்டு பாடும் குரலுக்கும் சம்மதம் இல்லாமல் நடந்து கொள்வது மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடிக்க வைத்தது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலமானாரோ இல்லையோ குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அசத்தி வருகிறார். ஆரம்பத்தில் புகழுடன் சேர்ந்து அண்ணன் தங்கையாக செய்யும் அட்ராசிட்டி மக்களிடம் பேராதரவை பெற்றது.

தற்போது நடிகையாக சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் படத்தில் பாட வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாக வைத்து வருகிறார்.
போட்டோஷூட்
அப்படி சமீபத்தில் நடைபெற்ற நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு சேலையில் ரசிகர்களை கவரும் வண்ணம் அழகில் வந்துள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார் ஷிவாங்கி.