மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த்.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவு
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளாக பயணித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வேட்டையன் படம் வெளிவரவுள்ளது. இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதயம் தொடர்பான பிரச்சனை ஏற்பட்ட நிலையில், சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தான் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.
பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், அவருடைய உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அவர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்புவார் என ரசிகர்கள் வேண்டி வருகிறார்கள்.
மேலும் தமிழக முதலவர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்" என பதிவு செய்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் திரு. @rajinikanth அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்.
— M.K.Stalin (@mkstalin) October 1, 2024