மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியின் அண்ணன்.. தற்போது எப்படி இருக்கிறார்?
Rajinikanth
By Kathick
ரஜினியின் அண்ணன் சத்யராயண ராவ்வை நாம் அனைவரும் அறிவோம். அவருக்கு தற்போது 84 வயது ஆகிறது. ரஜினியின் திரைப்பட விழாக்களில் அவர் கலந்துகொள்வார்.
பெங்களூருவில் இருக்கும் ஹொசகேரேஹள்ளியில் வசித்து வருகிறார் சத்யராயண ராவ். இந்த நிலையில், சத்யராயண ராவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அவரை உடனடியாக பெங்களூரு எல்க்ட்ரானிக் சிட்டியில் உள்ள நாராயணா ஹிருதாலயா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தனது அண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவலை அறிந்த நடிகர் ரஜினிகாந்த், உடனடியாக பெங்களூரு புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு தனது அண்ணனுடன் ரஜினி எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது.