ஒருநாளில் 7 படப்பிடிப்புகள்! மதுவால் யாருக்கும் வரக்கூடாத மரணம் நடிகர் சுரளி ராஜனுக்கு..

mgr suralirajan
By Edward Jun 03, 2021 10:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கென்றே எம்ஜிஆர், சிவாகி காலகட்டங்களில் நிறையபேர் இருப்பார்கள். அப்படிபட்ட அந்தகால சினிமாவில் இவர் என் படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் வந்தால் போது என்ற அளவிற்கு இருந்தவர் நடிகர் சுரளி ராஜன்.

எப்படியாவது படத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என தொடர்ந்து போராடி கால்சீட் வாங்குவார்களாம் அந்தளவிற்கு பிரபலமாக இருந்துள்ளார். அவர் குறித்த சில தகவல்களை சமீபத்தில் பத்திரிக்கையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

நடிகர், நடிகைகளுக்கு இணையாக பிஸியாக நடித்து வந்தவர் நடிகர் சுரளி. எங்க வீட்டு பிள்ளை என்ற படத்தின் மூலம் நடிகர் எம்ஜிஆருடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தவர். ஒரு படத்திற்கு 50 ஆயிரம் வரை சம்பளம் வாங்கக்கூடியவர். யாரிடமும் பக்குவமாக பேசக்கூடியவர், பத்திரிக்கையாளர்களுக்கென்ற மரியாதை.

கவிதா ஹோட்டலில் எப்பொழுதும் அவருக்கு என ஒரு ரூம் இருக்குமாம் பத்திரிகையாளர்கள் சென்றால் அவர்கள் அனைவரையும் மதுவினால் குளிப்பாட்டி அனுப்பிவிடுவாராம். அப்படிபட்ட நடிகர் யாரோ ஒருவர் கூறியதால் இளநீரில் ஜின் மதுவை ஊற்றி குடித்துள்ளார்.

இதனால் நுரையீரல் பாதிப்படைந்து உடம்பில் சர்க்கரை நோய் அதிகரித்ததால் காப்பாறமுடியாமல் மரணமடைந்தார். அவர் உயிர்காக்க எம்ஜிஆர் விமானத்தில் கூடம் மருந்துகளை வாங்கி வந்தும் அவரை காப்பாற்ற முடியவில்லையாம்.