பிரமோஷனுக்கு 3 லட்சம் கொடுத்தா வருவேன்.. தயாரிப்பாளரிடம் ஆணவத்தில் கண்டீசன் போட்ட நடிகை அபர்ணதி..

Gossip Today Tamil Actress Abarnathi
By Edward Jul 31, 2024 05:30 AM GMT
Report

அறிமுக இயக்குனர் ஸ்ரீவெற்றி இயக்கத்தில் நாற்கரப்போர் என்ற படம் உருவாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் கதாநாயகியாக 12 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடிகை அபர்ணதி நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் லான்ச் நிகழ்ச்சி சமீபத்தில் நடித்துள்ளது. பல முன்னணி நட்சத்திரங்களும் படத்தில் நடித்தவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் நாயகி அபர்ணதி மட்டும் பங்கேற்கவில்லை.

பிரமோஷனுக்கு 3 லட்சம் கொடுத்தா வருவேன்.. தயாரிப்பாளரிடம் ஆணவத்தில் கண்டீசன் போட்ட நடிகை அபர்ணதி.. | Suresh Kamakshi Obsession Abarnathi Behaviour

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகை அமர்ணதியை பற்றிய குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கிறார். அபர்ணதிக்கு படத்தின் தயாரிப்பாளர் பிரமோஷனுக்கு போன் செய்து வர கூப்பிட்டு இருக்கிறார். ஆனால் அவங்க, நான் வரமாட்டேன், எனக்கு பிரமோஷனுக்கு தனியா காசு கொடுக்க வேண்டும் என்று கேட்டியிருக்கிறாராம் அபர்ணதி.

இந்த விஷயத்தை தயாரிப்பாளர் என்னிடம் சொல்ல நானும் அபர்ணதிக்கு கால் செய்து பேசினேன். வர முடியாதுன்னு சொன்னாங்க. அதுமட்டும் இல்லாமல் ரெண்டு மூணு கண்டீசனும் வச்சாங்க. நான் ஸ்டேஜ்ல யார் பக்கத்தில் உட்கார வேண்டும் என்ற அளவிற்கு கண்டீசன் போட்டாங்க. எனக்கு சமமானவர்கள் தான் உட்கார வேண்டும் என்று சொன்னதும் எனக்கு பயங்கர கோபமாகிவிட்டது.

பிரமோஷனுக்கு 3 லட்சம் கொடுத்தா வருவேன்.. தயாரிப்பாளரிடம் ஆணவத்தில் கண்டீசன் போட்ட நடிகை அபர்ணதி.. | Suresh Kamakshi Obsession Abarnathi Behaviour

பின் நடிகர் சங்கத்தில் புகார் கொடுங்கன்னு சொன்னேன், அதற்கு அவர் நான் நடிகர் சங்கத்துலயே இல்லைன்னு சொல்லிவிட்டார். கடைசியில் வருவீங்களா? இல்லையா? என்று கேட்டேன். 3 லட்சம் கொடுத்தால் வருவேன், இல்லைன்னா வரமாட்டேன் என்று சொன்னார். உங்களுக்கு 3 லட்சம் கொடுக்குறதுக்கு, வேற எதுக்காது பயன்படுத்துவோம் என்று சொல்லிவிட்டேன்.

பின் 3 நாட்கள் கழித்து, நான் யார் என்று தெரியாமல் பேசியதாகவும் நான் வருகிறேன் என்றும் சொன்னார். இப்போது அவர் வரவில்லை, அவுட் ஆஃப் ஸ்டேஷன்னு சொன்னார்களாம். அவுட் ஆஃப் ஸ்டேஷனிலேயே இருக்கட்டும், உள்ளே வரவேண்டாம். தமிழ் சினிமாவுக்கு இப்படிப்பட்ட நடிகைகளே வேண்டாம் என்று சுரேஷ் காமட்சி ஓப்பனாக பேசியிருக்கிறார்.

பிரமோஷனுக்கு 3 லட்சம் கொடுத்தா வருவேன்.. தயாரிப்பாளரிடம் ஆணவத்தில் கண்டீசன் போட்ட நடிகை அபர்ணதி.. | Suresh Kamakshi Obsession Abarnathi Behaviour