சூர்யா எடுத்த பெரிய ஆபத்து.. சூப்பர் ஸ்டார் அடிவாங்கியதை நியாபகப்படுத்திம் இயக்குனர்
கோச்சடையான் vs சூர்யா42
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா, வணங்கான், வாடிவாசல் படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நிலையில் அவரது 42 வது படத்தை இயக்குனர் சிறுத்தை சிவாவிடம் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் பூஜை ஆரம்பிக்கப்பட்டு அதன் மோஷன் வீடியோவும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 10 மொழிகளில் 3டி அமைப்பில் வேள்பாரி நவலை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ளது.
ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான கோச்சடையான் படம் 3டியில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை கண்டது.
ஜெய்ப்பாரா சிவா
3டி தொழில்நுட்பத்தை ஹாலிவுட் மக்கள் எதிர்ப்பார்க்கும் அளவிற்கு இந்திய ரசிகர்கள் அதை தற்போது வரை அரையும் குறையுமாகத்தான் ஏற்று வருகிறார். அப்படியிருக்கையில் சூப்பர் ஸ்டார் ஒரு ரிஸ்க் எடுத்து தோல்வியை கண்டார்.
தற்போது சூர்யாவை வைத்து சிறுத்தை சிவா இப்படியொரு ரிஸ்க் எடுத்துள்ளார். சாதாரணம் படங்களை இயக்கி விமர்சனத்திற்குள்ளான சிறுத்தை சிவா ஏன் இப்படி செய்கிறார் என்று சூர்யா ரசிகர்கள் சிலர் புலம்பியும் வருகிறார்கள்.