அந்த நடிகை தான் வேண்டும்? .. சூர்யாவுக்காகபிளான் போட்டு தூக்கிய இயக்குனர் சிறுத்தை சிவா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா, பாலாவின் வணங்கான் படத்திலும் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் கமிட்டாகி பிஸி கால்ஷீட்டில் இருந்து வருகிறார்.
சில பணிகளால் வணங்கான் படப்பிடிப்பு தாமதமாவதால் சூர்யாவின் 42 வது படத்தினை இயக்க பல இயக்குனரிடம் கதை கேட்டிருந்தார் சூர்யா. அந்த லிஸ்ட்டில் இயக்குனர் சிறுத்தை சிவா பெயர் அடிப்பட்டு கடைசியில் அவரையே தேர்வு செய்து போஷன் போஸ்டரையும் சூர்யா - சிவா வெளியிட்டனர்.
யுவி கிரியேஷன் நிறுவனத்துடன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். 10 மொழிகளில் 3டி படமாக உருவாகவுள்ள இப்படத்தில் ஆனந்த்ராஜ், கோவை சரளா, கிங்ஸ்லி, யோகி பாபு போன்ற நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில் கதாநாயகிகளின் லிஸ்ட்டில் முதலில் பாலிவுட் கிளாமர் குயின் என்று கூறப்படும் திஷா பதானி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் வாய்ப்பிளக்க வைத்ததை அடுத்து சூர்யாவுக்காக சிறுத்தை சிவா பாலிவுட் கிளாமர் குயினை இறக்கியுள்ளது படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.
[https://www.instagram.com/p/CiSLQYCLkgj/]