விஜய் நிராகரித்த கதையில் ஹீரோவாக நடிக்கும் சூர்யா.. இயக்குனர் யார் தெரியுமா
Suriya
Vijay
By Kathick
நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் கங்குவா. இதை தொடர்ந்து கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 44வது படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சூர்யாவின் 45வது படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தை பிரபல இயக்குனரும், நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி தான் இயக்கப்போகிறாராம்.
ஆர்.ஜே. பாலாஜி நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்கவிருந்தார். அப்போது விஜய்க்கு ஒரு கதையை கூறியிருந்தார். ஆனால், அந்த சமயத்தில் இருவரும் இணைந்து பணியாற்ற முடியவில்லை.
இந்த நிலையில், விஜய்க்கு சொன்ன கதையில் தான் தற்போது சூர்யாவை வைத்து இயக்க போகிறாராம் பாலாஜி.
மேலும் இப்படத்தை அடுத்த ஆண்டு மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.