பொது இடத்தில் சூர்யாவுடன் சண்டை போட்ட நபர்.. வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படம் நாளை பிரமாண்டமான முறையில் வெளிவரவுள்ளது.
கங்குவா படத்திற்காக நடிகர் சூர்யா மற்றும் கங்குவா படக்குழுவினர் அனைவரும் தொடர்ந்து பல்வேறு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், முன்பையில் நடந்த படத்தின் பிரஸ் மீட்டில் சூர்யாவிடம் மீடியாவை சேர்ந்த நபர் ஒருவர் ஆவேசமாக வாக்குவாதம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூர்யா தாமதமாக வந்தது, நேரம் வீணானது பற்றி அந்த நபர் சண்டை போட்டிருக்கிறார். ஆனால், நடிகர் சூர்யா அவரிடம் கூலாக நடந்துகொண்டு, அந்த நபரை சமரசம் செய்ய முயற்சித்துள்ளார்.
இந்த வீடியோ வைரல் ஆகும் நிலையில் பலரும் சூர்யாவுக்கு ஆதரவாக இணையத்தில் குரல் கொடுத்து வருகின்றனர். பாலிவுட் ஹீரோவாக இருந்தால் இப்படி எல்லாம் பேசுவார்களா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.