மகளுக்காக கண்ணீர் விட்டு அழுத நடிகர் சூர்யா.. காரணம் என்ன தெரியுமா

Suriya Jyothika
By Kathick May 22, 2025 03:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான நடிகர் சூர்யா நடிகை ஜோதிகா காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் ஜோடிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சூர்யா, ஜோதிகா தங்களது பிள்ளைக்காய்களுடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். குழந்தைகளின் படிப்புக்காக தான் இந்த முடிவை அவர்கள் எடுத்ததாக முதலில் தகவல் வெளிவந்தது.

ஆனால் ஜோதிகா அவரது பெற்றோர் உடன் இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த முடிவை எடுத்ததாக சூர்யா விளக்கம் அளித்தார்.

மகளுக்காக கண்ணீர் விட்டு அழுத நடிகர் சூர்யா.. காரணம் என்ன தெரியுமா | Suriya Cried For Her Daughter

இந்த நிலையில், சூர்யாவின் மகள் தியா தனது படிப்பிற்காக அமெரிக்காவிற்கு செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜூலையில் இருந்து அவர் அமெரிக்காவிற்கு புறப்படுகிறாராம்.

அமெரிக்காவில் படிக்க தியாவுக்கு சீட் கிடைத்திருக்கும் செய்தி வந்ததும், ஒரு தந்தையாக சூர்யா தேம்பி தேம்பி அழுதாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.