பாலாவையும் சிறுத்தை சிவாவையும் ஓரங்கட்டி லீவ் எடுத்த சூர்யா.. காரணமே மனைவி ஜோதிகா தானாம்..

Suriya Jyothika Bala Siva (director)
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து சமீபத்தில் தேசிய விருது பெற்று புகழப்பட்டு வருபவர் நடிகர் சூர்யா. சூரரை போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்காக விருதை பெற்றப்பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

வணங்கான்

இயக்குனர் பாலாவுடன் பல ஆண்டுகள் கழித்து வணங்கான் படத்தில் நடித்து வந்தார் சூர்யா. நடிகை கிருத்தி செட்டி ஜோடியாக நடிக்கும் இப்படத்தில் முதல் பாதி படப்பிடிப்பு முடிந்தநிலையில் கூடிய சீக்கிரம் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஆர்மபிக்கும் என்று சூர்யா கூறியிருந்தார். ஆனால் அப்படத்தில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது என்று கூறப்பட்டது. இதனை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தினை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் சிறுத்தை சிவாவின் சூர்யா 42 படத்தின் பூஜையை ஆரம்பித்து ஷூட்டிங்கையும் ஆரம்பித்தார்.

லீவ் எடுத்த சூர்யா

இந்நிலையில் படங்களின் படப்பிடிப்பிற்கு சில நாட்கள் ஓரங்கட்டியுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகா மம்முட்டியின் மலையாள படத்தில் நடித்து வருவதால் அவர் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். அதனால் தன் பிள்ளைகளுடன் நேரம் ஒதுக்க சூர்யா லீவ் போட்டுள்ளாராம். இத்தனை வருடங்கள் மனைவியின் தியாகத்தை மனதில் வைத்து மனைவியின் கேரியருக்காக சூர்யா இப்படியொரு முடிவெடுத்துள்ளதை பலர் பாராட்டி வருகிறார்கள்.