வரிசைக்கட்டும் 3 ப்ராஜெக்ட்ஸ்!!! சூர்யா வலையில் சிக்கிய 26 வயதான ஸ்ரீதேவி மகள்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் 10 மொழிகளில் உருவாகி வரும் கங்குவா படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இப்படத்தின் போஸ்டர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அனைவரையும் ஈர்த்து வருகிறது. இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் தன்னுடைய 43வது படத்தில் நடிக்கவுள்ளார்.
படத்தின் வேலைகள் மும்முரமாக சென்று வருகையில் சூர்யா அடுத்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருக்கிறார். அதன்பின் பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் மகாபாரதத்தில் வரும் கர்ணன் வாழ்க்கையை சொல்லும் படத்தில் கர்ணன் வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.
இப்படத்தினை சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன் மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளார்களாம்.
இந்நிலையில் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் ஜூனியர் என் டி ஆர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி நடித்து வருகிறார் நடிகை ஜான்வி கபூர்.