வெச்சு செய்த பாலா, தலைதெறிக்க ஓடிய சூர்யா.. இந்த ஜென்மத்தில் திரும்பி வரமாட்டார்
சூர்யா பாலா கூட்டணியில் இருந்து நந்தா, பிதாமகன் உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்கள் வெளிவந்துள்ளது. இதை தொடர்ந்து புதிதாக இந்த கூட்டணியில் உருவாகி வந்த திரைப்படம் தான் வணங்கான்.
இப்படத்தின் படப்பிடிப்பில் சூர்யாவிற்கும், பாலாவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பதாக சில தகவல் வெளிவந்தன. இயக்குனர் பாலா, நடிகர் சூர்யாவை உச்சி வெயிலில் பல மணி நேரம் ஓடவிட்டதாகவும் கூறினார்கள்.
இதனால், படப்பிடிப்பில் இருந்து சூர்யா சொல்லாமல் கிளம்பிவிட்டதாக தகவல் வெளியானது. இதன்பின் பிரச்சனை எல்லாம் முடிவு வந்து மீண்டும் படப்பிடிப்பு துவங்கவிருந்த நிலையில், ஷாக்கிங் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த அறிக்கையில், நடிகர் சூர்யா வணங்கான் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக இயக்குனர் பாலா கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இது இருவரும் பேசி சுமுகமாக எடுத்து முடிவு தான் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் வேறொரு புதிய படத்தில் இருவரும் இணைவோம் என்று தெரிவித்துள்ளார் இயக்குனர் பாலா. ஆனால், பாலா வெச்சு செய்ததற்கு இந்த ஜென்மத்தில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க மாட்டார் என்று தான் கோலிவுட் வட்டாரத்தில் பேசி கொள்கிறார்கள்.
