சீட் இல்லை என்று கூறிய கல்லூரி நிர்வாகம்! பல ஆண்டு உண்மையை கூறிய நடிகர் சூர்யா

suriya tamilactor loyolacollage
By Jai Aug 05, 2021 03:16 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 90களில் விஜய் அஜித்திற்கு இணையாக பேசப்படும் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. சூரரை போற்று படத்தின் வெற்றிக்கு பிறகு, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவர், வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியுள்ளார். சமீபத்தில் லயோலா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு இணையம் வழியாக நடைபெற்றது.

இதில் பங்கேற்ற நடிகர் சூர்யா தன்னுடைய பசுமையான கல்லூரி நினைவுகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார். தன்னுடைய கல்லூரி காலம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை சூர்யா பகிர்ந்து கொண்ட காணொலி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அப்போது லயோலா கல்லூரியில் 1992ல் நான் சீட் வாங்க நின்ற போது எனக்கு சீட் கொடுக்க யாரும் முன்வரவில்லை.

நடிகர் என்பதால் பாதியில் நின்று விடுவார்கள். அதனால் சீட்டினை வீணடிக்கவிரும்பவில்லை என்று கூறினார்கள். அதன்பிறகு நான் உறுதி அளித்த பிறகே எனக்கு சீட் கொடுத்தார்கள் என்று கூறியுள்ளார் நடிகர் சூர்யா.