4 படங்களின் ஷீட்டிங் ஆரம்பிக்காமலே 80 கோடி வசூல்! பணத்தில் புறளும் நடிகர் சூர்யா..

suriya jyothika jaibhim 2dproduction
By Edward Aug 07, 2021 07:30 AM GMT
Report

தமிழ்சினிமாவில் உச்ச நட்சத்திரமாக 90களில் இருந்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் சூர்யா. ஆரம்பத்தில் பலரால் விமர்சிக்கப்பட்டு பின் நடிப்பால் இந்த இடத்திற்கு வந்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான சூரரைப்போற்று படத்திற்கு பிறகு நவரசா படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நடிப்பை தாண்டி தயாரிப்பிலும் ஆர்வம் கொண்டு மிகப்பிரம்மாண்டமாக செலவு செய்யும் படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டாத சூர்யா சிறு பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறார் நடிகர் சூர்யா. இந்நிலையில், அருண் விஜய் மற்றும் அவரது மகன் அர்னவ் விஜய் நடிக்கும் ஓ மை டாக், சசிகுமார் மற்றும் சூர்யா மனைவி ஜோதிகாவின் உடன் பிறப்பே, தா செ ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ஜெய் பீம் மற்றும் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் போன்ற நான்கு படங்களை அவரது 2டி தயாரிப்பு நிறுவனத்தோடு தயாரித்து வருகிறார் சூர்யா.

இந்நிலையில் அந்த நான்கு படங்களையும் ஓடிடி தளமான அமேசான் நிறுவனத்திடம் சுமார் 80 கோடிக்கு விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெய்மீம் படத்தில் மட்டும் அவரின் சம்பளத்தை விட்டு 37 கோடிக்கு விற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதையறிந்த பலர் ஆரம்பகாலத்தில் சினிமா தியேட்டர்களை நம்பித்தானே சூர்யா இருந்து வந்துள்ளார். தற்போது அனைத்து படங்களையும் ஓடிடி தளத்தில் விற்றால் இது அநியாகமாக தெரியவில்லை என்று கடும் விவாதத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.