13 வருட போராட்டம்!! இரண்டே நாளில் உச்ச வசூலை எட்டிய சூர்யாவின் கருப்பு!! குஷியில் ஆர்ஜே பாலாஜி..
கருப்பு படம்
நடிகர் சூர்யா, திரிஷா நடிப்பில் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கி வில்லனாக நடித்த படம் தான் கருப்பு. சிங்கம் 2 படத்திற்கு பின் நடிகர் சூர்யா கடந்த 13 ஆண்டுகளாக பெரிய வெற்றிப்படத்தை கொடுக்கவில்லை. அதை தவிடுபொடியாக்கும் வண்ணம் கருப்பு படம் மாறியிருக்கிறது.

கடந்த 14 ஆம் தேதி கருப்பு படம் ரிலீஸாகும் என்று எதிர்பார்த்த நிலையில் பைனான்ஸ் பிரச்சனையால் அன்று ரிலீஸாகவில்லை. இதனையடுத்து கருப்பு படம் மே 15 ஆம் தேதி அனைத்து தடைகளையும் உடைத்து ரிலீஸ் செய்யப்பட்டது.
படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது. கருப்பு படம் வெளியான முதல் நாளில் மட்டுமே 35 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.

பாக்ஸ் ஆபிஸ்
இதனையடுத்து படம் ரிலீஸாகிய இரண்டாவது நாளில் உலகளவில் இதுவரை ரூ. 75 கோடிக்கும் மேல் வசூலித்து மிகப்பெரிய சாதனையை பெற்று வருகிறது. 13 ஆண்டு ரசிகர்களின் காத்திருப்புக்கு ஆர்ஜே பாலாஜி மாபெரும் ஹிட்டை சூர்யாவுக்கு கொடுத்திருக்கிறார்.