சூர்யாவை நம்பினா இப்படித்தான்! கழட்டி விட்டு அக்கடதேசம் ஓடிய அண்ணாத்த, விசுவாசம் இயக்குனர்?
bala
suriya
annaatthe
tamilcinema
siruthaisiva
By Edward
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. சூரரை போற்று, ஜெய் பீம் போன்ற மிகப்பெரிய வெற்றிப்படங்களை கொடுத்த பின் பல படங்களில் நடித்தும் தயாரித்தும் வருகிறார்.
வெற்றிமாறன், பாலா, சிவா உள்ளிட்ட பல இயக்குனர்கள் கதைகளை கேட்டு ஓகே சொல்லியுள்ளார். பாலாவின் படத்திற்கு முன்பே கால்ஷீட் வாங்கி இருக்கிறார் அண்ணாத்த, விசுவாசம் பட இயக்குனர் சிறுத்தை சிவா.
ஆனால் தற்போது வாடிவாசல் படத்தை ஓரங்கட்டிவிட்டும் சிறுத்தை சிவா படத்தையும் ஒதுக்கிவிட்டு பாலா படத்தில் நடிக்க தீவிரம் காட்டியுள்ளார்.
இதனால் கடுப்பாகிய இயக்குனர் சிவா கோபத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் ஒரு படத்தினை இயக்க திட்டமிட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் கூடிய சீக்கிரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.