என்னடா இது சூர்யா - சிவா படத்துக்கு வந்த சோதனை.. பூஜையை வெச்சு செய்த நெட்டிசன்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா இயக்குனர் பாலா, வெற்றிமாறன் இயக்கத்தில் கமிட்டாகி அப்படத்திற்கான வேலைகளை ஆரம்பித்தும் நடித்தும் வருகிறார்.
சூர்யா - பாலா படமான வணங்கான் படத்தின் ஷூட்டிங் சில காரணங்கள் ஆரம்பிக்காமல் இருக்கிறது. 41 படத்திற்கு பிறகு சூர்யாவின் 42வது படத்தினை இயக்குவதற்கு பல போட்டிகள் நிலவியது.
இந்நிலையில் #சூர்யா41 படத்தினை சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. அதை உறுதிப்படுத்த இன்று காலை 7 மணியளவில் அப்படத்திற்கான பூஜை நடைபெற்றுள்ளது. அகரன் நிறுவனத்தில் ஆரம்பித்த இந்த படத்தினை ஞானவேல் ராஜா வெளியீட்டில் சூர்யா தயாரிப்பில் இசையமைப்பாளர் டிஎஸ்பி இசையமைக்கவுள்ளார்.
இந்த தகவல் வெளியான நிலையில் இப்படத்தின் பூஜை நடைபெற்ற வரவேற்பு இடத்தின் கோலிவுட் முதல் ஹால்வுட் நட்சத்திரங்கள் வருவது போல் நெட்டிசன்கள் மீம்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து வைரல்லாகி வருகிறார்கள்.