19 ஆண்டுகளுக்கு பின் சூர்யாவுடன் ஜோடி சேரும் 41 வயது நடிகை!
Suriya
Trisha
By Karthick Raja
சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் கடந்த வாரம் கங்குவா படம் வெளிவந்த நிலையில், படம் எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை.

கடுமையான விமர்சனங்களையும் சந்தித்துள்ளது. கங்குவா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்ராஜ் படத்தில் நடித்த முடித்துள்ள சூர்யா, அடுத்ததாக ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது சூர்யாவின் 45வது திரைப்படமாகும்.
இந்த நிலையில், இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. 19 ஆண்டுகள் கழித்து மீண்டும் இவர்கள் இருவரும் ஜோடிகளாக நடிக்கவுள்ளாராம்.

த்ரிஷா - சூர்யா இருவரும் இணைந்து மௌனம் பேசியதே மற்றும் ஆறு படங்களில் நடித்துள்ளனர். மேலும் மன்மதன் அம்பு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு த்ரிஷாவுடன் சூர்யா நடனமாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.