கணவர் பற்றி சொன்ன வார்த்தை!! ஸ்வாசிகாவால் மலையாள ரசிகர்கள் கோபம்..
ஸ்வாசிகா
மாமன், லப்பர் பந்து, கருப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்வாசிகா. ஆரம்பத்தில் சீரியலில் நடித்திருந்தாலும் இப்போது படங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகா நடிகை நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார். திருமணமாகி நடித்து வரும் ஸ்வாசிகாவுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரின் போட்டோஷூட்டுக்கு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

சீரியல் நடிகர் பிரேம் ஜேக்கப்பை திருமணம் செய்து கொண்டப்பின் அவர் அளித்த பேட்டியொன்றில், தினமும் காலையில் எழுந்ததும் கணவரின் காலில் விழுந்து வணங்குவேன் என்று கூறியதுதான் பலரது கவனத்தையும் ஈர்த்தது. பெண்கள் முன்னேற்றம், இது எந்த காலத்து சிந்தனை என்று பலரும் விவாதித்து வருகிறார்கள்.
அதே சமயம் ஒருசிலர் அது அவருடைய தனிப்பட்ட விருப்பம், அதில் மற்றவர்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறி வருகிறார்கள்.
கணவர் பற்றி
இந்த சர்ச்சை ஓய்வதற்குள் மலையாள யூடியூப் சேனல் ஒன்றில், நான் வீட்டில் இருந்தால் என் கணவருக்கு நானே சமைத்து கொடுப்பேன், பாத்திரங்களையும் நானே கழுவுவேன், அது எனக்கு பிடிக்கும், அதில் எந்த சிரமமும் இல்லை. என்னிடம் வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறது. ஆனாலும் போன் பில் கட்ட வேண்டுமென்றால் கணவரிடம்தான் சொல்வேன்.

எனக்கு பணம் தேவைப்பட்டாலும் அவரிடம் தான் கேட்பேன். என்னிடம் பணம் இருந்தாலும் அவர் அனுப்ப வேண்டும் என்று நினைப்பேன் என்று பேசி விவாதத்தை கிளப்பியுள்ளார்.
விளக்கம்
இதுகுறித்து விரிவாக விளக்கம் அளித்த ஸ்வாசிகா, நான் செய்யும் விஷயங்களை எல்லாரும் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை, இது என் வாழ்க்கை, எனக்கு இப்படித்தான் இருக்க பிடிக்கும். ஒருவேளை இது என் ஃபேண்டஸியாக கூட இருக்கலாம், ஆனால் அதை நா என்ஜாய் பண்றேன். 9 வயதில் இருந்தே சம்பாதிக்க ஆரம்பித்தேன்.
எல்லா விஷயங்களையும் நானே
பார்த்துக் கொண்டேன். இப்போது கணவரை சார்ந்து
இருப்பதில் ஒரு சந்தோஷம் இருக்கிறது என்று
கூறியிருக்கிறார். இதனை மலையாள பாணியில் ஸ்வாசிகா வேறுமாதிரி சொன்னதால் மலையாள ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள்.