என் திருமணத்தை மறைத்துவிட்டேன்!! காரணம் இதுதான்.. ரகசியத்தை உடைத்த டாப்சி

Taapsee Pannu Marriage Actress
By Bhavya Dec 16, 2024 11:30 AM GMT
Report

டாப்சி 

தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஆடுகளம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் டாப்சி. அதன்பின் வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

என் திருமணத்தை மறைத்துவிட்டேன்!! காரணம் இதுதான்.. ரகசியத்தை உடைத்த டாப்சி | Taapsee About Her Marriage

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் இவர் சமீபத்தில் Dunki மற்றும் Judwaa 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். இவர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக சினிமா வட்டாரத்தில் பேசும் பொருளாக உலா வந்தது.

காரணம் இதுதான்

இந்நிலையில், பேட்டி ஒன்றில் டாப்சி அவர் திருமணம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், "எனக்கு கடந்த வருடமே திருமணம் நடைபெற்று முடிந்தது. ஆனால், அது குறித்து எந்த தகவலையும் நான் வெளியிடவில்லை.

என் திருமணத்தை மறைத்துவிட்டேன்!! காரணம் இதுதான்.. ரகசியத்தை உடைத்த டாப்சி | Taapsee About Her Marriage

அதை மறைத்து விட்டேன் அதற்கு முக்கிய காரணம் நானும் என் கணவரும் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை தனித்து வைத்திருக்க விரும்புகிறோம். என் கணவரை எனக்கு 2013 - ம் ஆண்டு முதலே தெரியும், அவருக்கு என்னை குறித்து அனைத்து விஷயங்களும் நன்றாக தெரியும்" என்று தெரிவித்துள்ளார்.