பாலிவுட் பிரபலத்துடன் அந்த மாதிரி உடையில் நெருக்கமாக இருக்கும் தமன்னா.. காசுக்காக இப்படியா
கோலிவுட் முதல் பாலிவுட் வரை ரசிகர்களை கவர்ந்த முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை தமன்னா. 32 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருக்கும் நடிகை தமன்னா, படங்களிலும் மட்டுமல்லாமல் வெப் சீரிஸ்களிலும் கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளிவந்திருந்த நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸில் நடித்ததன் மூலம் இவருக்கு நல்ல பெயர் திரையுலகில் கிடைத்தது. இதனால், தொடர்ந்து இதை போன்ற திரில்லர் கதைக்களத்தில் அமையும் வெப் சீரிஸில் நடிக்க தமன்னா முடிவெடுத்துள்ளாராம். இதுமட்மின்றி அவ்வப்போது ஒரே ஒரு பாடலுக்கும் நடனம் ஆடி வருகிறார்.
இதற்காக எப்போதும் வாங்குவதை விட, அதிக சம்பளமும் வாங்குகிறாராம். இந்நிலையில், தற்போது பாலிவுட் பிரபலத்துடன் பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார் தமன்னா. அங்கு நடிகை தமன்னா அந்த பிரபலத்துடன் ஹாட் உடை அணிந்து நெருக்கமாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
