உடல் எடையை குறைக்க அந்த மருந்து தான் காரணமா? நடிகை தமன்னா விளக்கம்

Tamannaah Actress
By Kathick Nov 11, 2025 03:35 AM GMT
Report

நடிகை தமன்னாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் காதல் முறிவு ஏற்பட்டது. இதன்பின் முழுமையாக தனது கவனத்தை சினிமா பக்கமும் ஜிம் ஒர்க்அவுட் பக்கமும் திருப்பினார்.

இதன்மூலம் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறினார். தமன்னா உடல் எடையை குறைத்து ஆளே மாறியது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. இவர் ஜிம் ஒர்க்அவுட் செய்து, சரியான டயட் மூலம் உடல் எடையை குறைத்தார்.

உடல் எடையை குறைக்க அந்த மருந்து தான் காரணமா? நடிகை தமன்னா விளக்கம் | Tamanna Dismissed Rumour Using Weight Loss Drugs

ஆனால், அவர் ஒரு குறிப்பிட்ட மருந்து எடுத்துக்கொண்டதால்தான் இப்படி மாறியுள்ளார் என இணையத்தில் பலரும் நடிகை தமன்னாவை ட்ரோல் செய்து வந்தனர்.

இந்த நிலையில், தனது உடலில் நடந்த மாற்றம் முழுமையாக இயற்கையாக தான் நடந்தது, எந்த குறுக்கு வழியையும் பயன்படுத்தவில்லை என தமன்னா கூறியுள்ளார். "ஒவ்வொரு ஐந்து வருடமும் பெண்ணின் உடல் மாறிக்கொண்டேதான் இருக்கும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் தன்னை பற்றி உலா வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தமன்னா.