கார்த்தி - தமன்னா காதல் விவகாரம்!.. அவசர அவசரமாக நடந்த திருமணம்

Karthi Tamannaah
By Dhiviyarajan Jun 20, 2023 06:00 AM GMT
Report

அமீர் இயக்கத்தில் கடந்த 2007 -ம் ஆண்டு வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் கார்த்தி. இப்படத்தை தொடர்ந்து இவர் பல வித்தியாசமான காதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளிவந்த பையா படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இதில் ஹீரோயினாக தமன்னா நடித்திருப்பார்.

இப்படத்தில் தமன்னா கார்த்தி கெமிஸ்ட்ரி நன்றாக வந்திருக்கும். இதனால் சில பத்திரிகைகளில் கார்த்தி தமன்னா காதலிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதற்கு கார்த்தி தரப்பில் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

பத்திரிகைகளில் இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டதால், கார்த்தி சொந்த கார பெண்ணை அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டார் என்று செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.