ரொமான்டிக் விடுமுறைக்காக அந்த நடிகருடன் சென்றாரா தமன்னா..இணையத்தில் கசிந்த வீடியோ
இந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகை இருப்பவர் தான் தமன்னா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வென் தொடரில் படு கவர்ச்சியாகா நடித்திருந்தார்.
இப்படத்தில் தன்னுடன் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் டேட்டிங் செய்வதாக தகவல் வெளிவந்தது. மேலும் இதை உறுதிப்படுத்தும் வகையில் விஜய் வர்மாவும் தான் தமன்னாவோடு டேட்டிங் செய்து வருவதை உறுதிப்படுத்தினார்.
அதுமட்டுமின்றி பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட விஜய் வர்மா என் வாழ்க்கையில் நிறைய அன்பும், காதலும் நிறைந்து இருக்கிறது என்றும் கூறி இருந்தார்.
இந்நிலையில் விஜய் வர்மாவும், தமன்னாவும் தனி தனியாக விமான நிலையத்திற்கு வரும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இருவரும் தனித்தனியாக விமான நிலையத்திற்கு வந்திருந்தாலும், அவர்கள் ஒரு ரொமான்டிக் விடுமுறைக்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ளனர் என்று சிலர் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.