சினிமாவை தாண்டி அந்த தொழில் செய்து பணம் சம்பாதிக்கும் தமன்னா!!
தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் தமன்னா. அதையடுத்து வரிசையாக முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார்.
தற்போது தமன்னாவிற்கு தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பு குறைவாக இருப்பதால் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
பாலிவுட்டில் அடுத்தடுத்து இவர் நடிப்பில் ஜி கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வெப் தொடர்கள் வெளியானது. அதில் இரண்டிலும் அவர் முத்தக் காட்சிகள் மற்றும் படுக்கையறைக் காட்சிகளில் படு கவர்ச்சியாகவே நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் இவருக்கு ரூ. 120 கோடி வரை சொத்து மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் தமன்னா ஒரு படத்தில் நடிக்க ரூ. 5 கோடி வரை சம்பளமும், ஐட்டம் பாடலுக்கு நடனமாட ரூ. 1 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.
அதுமட்டுமன்றி தமன்னா சொந்தமாகி நகைக்கடை ஒன்றையும் வைத்து இருக்கிறாராம். அதன் மூலம் நன்கு சம்பாதித்து வருகிறாராம்.