இரு காதல் தோல்விகள்!! ரிலேஷன்ஷிப் குறித்து மனம் திறந்த நடிகை தமன்னா..

Tamannaah Gossip Today Indian Actress Relationship
By Edward Sep 11, 2024 02:30 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை தமன்னா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார்.

இரு காதல் தோல்விகள்!! ரிலேஷன்ஷிப் குறித்து மனம் திறந்த நடிகை தமன்னா.. | Tamannaah Bhatia On Relationships Two Heartbreaks

படங்களில் பிஸியாக நடித்து வரும் தமன்னா, காதலருடன் கிடைக்கும் நேரத்தில் செலவிட்டு வருகிறார் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், ரிலேஷன்ஷிப் பற்றி சிலவிஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் உங்கள் பார்ட்னரின் குணாதிசயங்கள் எந்தவிதத்திலும் மாற்ற நினைக்காதீர்கள்.

உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்பது அவர்களை கட்டுப்படுத்துவது போன்றது. பொய் சொல்வது என்பது இருக்கக்கூடாது. சிறிய அளவிலான பொய் கூட சொல்லக்கூடாது. நீங்கள் காதலிக்கும் பெண் சொல்வதை கேளுங்கள். அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் காதுக்கொடுத்து கேளுங்கள். எல்லா நேரத்திலும் அவர்கள் உங்களிடம் தீர்வை தேடி வருவதில்லை.

இரு காதல் தோல்விகள்!! ரிலேஷன்ஷிப் குறித்து மனம் திறந்த நடிகை தமன்னா.. | Tamannaah Bhatia On Relationships Two Heartbreaks

அவர்கள் சொல்வதை கேட்டும் நபர் தேவை என்பதால் அதை புரிந்து கொண்டு பிரச்சனைகளை கேளுங்கள். எனக்கு கிஃப்ட் கொடுத்தால் கோவம் வரும். கிஃப்ட் லொடுத்து ஒருவரை ஒரு பொருளுக்குள் அடக்குவது போன்றது என்பதால் அது ரிலேஷன்ஷிப்பிற்கு விலை நிர்ணயம் செய்வது போன்று இருக்கும்.

ஒரு ரிலேஷன்ஷிப்பில் நேர்மையாக இருக்க வேண்டும் என்றும் காதலை மிகவும் வெளிப்படுத்தவும் நினைக்கிறேன். பாட்னர் கோவப்படும் எந்த விஷயத்தை சொல்லவே மாட்டேன்.

எனக்கு ஒரு ஹார்ட் பிரேக்(காதல் தோல்வி) சிறுவயதில் நடந்தது. அந்த நபருக்காக எல்லாவற்றையும் விடவேண்டுமா என்றும் வாழ்க்கையில் இன்னும் எவ்வளவோ விஷயங்கள் அனுபவிக வேண்டி இருக்கிறது என்று நினைத்து விலகினேன்.

இரண்டாவது பிரேக் அப் கொஞ்சநாள் கழித்து நடந்தது. அந்த ஹார்ட் பிரேக்கை பொறுத்தவரை அந்த நபர் என் வாழ்க்கையில் நல்ல விஷயங்களை கொடுக்கவில்லை. அதனால் அந்த காதலையும் கைவிட்டுவிட்டேன் என்று மன திறந்து பேசியிருக்கிறார் நடிகை தமன்னா.