காதலா? காமமா? காதல் நடிகருடன் கிளாமர் போஸில் தமன்னா எடுத்த முதல் போட்டோஷூட்..
தமிழ் சினிமாவில் கேடி படத்தில் அடக்கவுடக்கமான பெண்ணாக நடித்து அறிமுகமாகியவர் நடிகை தமன்னா. இப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார்.
ஆரம்பத்தில் அடக்கவுடக்கமாக நடித்தாலும் கிளாமரில் கொஞ்சம் தாராளம் காட்டி தான் நடித்து வந்தார். அந்தமாதிரியான காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் என்று 2016ல் பேட்டியொன்றில் தமன்னா கூறியிருந்தார்.
ஆனால் தற்போது பாலிவுட் பக்கம் போனதும் அங்கு மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்க கிளாமரில் எல்லைமீறி நடித்து வருகிறார். அதிலும் சமீபத்தில் ஜீ கர்தா என்ற வெப் தொடரில் முகம் சுழிக்க வைக்கும் படுக்கையறை மற்றும் முத்தக்காட்சிகளில் எல்லைமீறி நடித்துள்ளார்.
தற்போது தன்னுடைய காதல் நடிகரான விஜய் வர்மாவுடன் எடுத்த லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படத்தின் ரொமாண்டிக் போட்டோஷூட்டினை பகிர்ந்துள்ளார் நடிகை தமன்னா.
சில தினங்களுக்கு முன் காதலை வெளிப்படுத்திய தமன்னா தற்போது அவருடன் பல விதமாக போஸில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து காதலா? காமமா? என்ற கேப்ஷனில் பதிவினை பகிர்ந்துள்ளார்.