படுக்கையறை காட்சியில் என் குடுபத்துடன் பார்க்க!! லஸ்ட் ஸ்டோரிஸ்-ஆல் கஷ்டப்பட்ட நடிகை தமன்னா..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை தமன்னாவை பற்றி தான் இந்தியளவில் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் ஆரம்பத்தில் இருந்த தமன்னா, போகபோக கிளாமர் ரோலில் நடித்தாலும் எல்லைமீறிய படுக்கையறை காட்சியில் நடித்தது தான்.
சமீபத்தில் வெப் தொடர்களுக்காக முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளில் நடித்து ஷாக் கொடுத்தார். ஜி கர்தா, லஸ்ட் ஸ்டோரிஸ் 2 போன்ற தொடர்களில் ஆபாசமாக நடித்து இருப்பது பல விமர்சனத்தை கொடுத்த நிலையில் கதைக்கு தேவைப்பட்டதால் நடித்தேன் என்று கூறினார் தமன்னா.
இந்நிலையில் தன்னுடைய குடும்பத்துடன் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 பார்த்த போது மிகவும் சிரமப்படுவேன் என்றும் படபடப்புடன் அசவுகரியமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் நான் ஒரு கலைஞனாக அதில் நடித்ததில் என்னை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியிருக்கிறார். ரசிகர்கள் லஸ்ட் ஸ்டோரிஸ் 2வை பார்க்கும் போது எந்த தயக்கமும் இல்லாமல் பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் நடிகை தமன்னா.