வாழ்க்கையில் ஒரு முறை தான்.. தமன்னா குடும்பத்துடன் சென்றுள்ள இடத்தை பாருங்க
தமன்னா
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என சினிமாவில் கலக்கிக்கொண்டு இருப்பவர் தமன்னா.
தற்போது நடிப்பு, நடனம் என தொடர்ந்து பிஸியாக வலம் வருகிறார். கேஜிஎப், ஜெயிலர், ஸ்ட்ரீ 2 என தொடர்ந்து சூப்பர்ஹிட் படங்களில் தமன்னாவின் நடனம் இடம்பெற்று வருகிறது.
நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் தமன்னா, 2025ல் திருமணம் செய்துகொள்ள போகிறார் என கூறப்படுகிறது. தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் ஒடேலா 2 பட டீசர் நேற்று வெளியானது.
வீடியோ
இந்த படத்தில், தமன்னா துறவி வேடத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில், நேற்று தனது குடும்பத்துடன் மகா கும்பமேளா சென்றுள்ளார்.
அங்கு ஒடேலா 2 படத்தின் டீசரை படக்குழுவினருடன் இணைந்து தமன்னா வெளியிட்டுள்ளார். தற்போது, இவர் மகா கும்பமேளாவில் நீராடி, சிறப்பு வழிபாடு செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. இதோ,
#WATCH | Uttar Pradesh | Bollywood actress Tamannaah Bhatia took a holy dip and offered prayers at #MahaKumbhMela2025 in Prayagraj pic.twitter.com/VFCQapM8o4
— ANI (@ANI) February 22, 2025