அதிக சம்பளம் என்ற வசிய வலையில் சிக்கும் முன்னணி நடிகைகள்! அதில் இந்த நடிகையுமா..

samantha webseries amalapaul regina tamilactress
By Edward Aug 29, 2021 12:30 PM GMT
Report

தற்போதைய சினிமாவில் பெரும்பாலும் ஆட்டிப்படைக்கும் தளமாக இருப்பது வெப் சீரிஸ் தொடர்கள் தான். பாலிவுட்டில் ஓடிடி தளங்கள் ஆக்கிரமிப்பு அதிகரிப்பதை போன்று இந்த கொரோனா லாக்டவுன் தென்னிந்திய சினிமாவையும் விடவில்லை. சமீபகாலமாக கதாநாயகிகள் வெப் தொடர்களில் நடிக்க அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

அதற்கு காரணமாக இருப்பது படங்களில் கொடுக்கும் சம்பளத்தை விட கூடுதல் மடங்காக வெப் தொடர்களில் வாங்குகிறார்கள். அப்படி வெப் தொடர்களுக்கு தணிக்கை சான்றிதழ் கிடையாது என்பதற்காக ஆபாச வசனம் நெருக்கமான படுக்கையறை காட்சிகள் இடம் பெறும். அதற்கு அதிக சம்பளம் கொடுப்பதால் நடிகைகளும் ஓகே என்று கூறி நடித்து கொடுக்கிறார்கள்.

அந்தவரிசையில் தமிழ் நடிகைகள் ஒருசிலர் அந்த வலையில் சிக்கி வருகிறார்கள். அதில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகை சமந்தா. சமீபத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் மோசமாக நடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைதொடர்ந்து வெப் சீரிஸ் பக்கம் சென்ற சமந்தா தி பேமிலி மேன் 2 சீசனில் பெண்களை இழிவு படுத்தும் காட்சிகளில் நடித்து சர்ச்சையில் சிக்கினார்.

இதையடுத்து மற்றொரு வெப் சீரிஸில் நடிக்கவும் இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. நடிகை ரெஜினா கசண்ட்ரா ஆரம்பத்தில் குடும்ப பாங்கான பெண்ணாக இருந்து தற்போது கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார். லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.

நடிகை அமலாபால் ஆரம்பகாலகட்டத்தில் சிந்து சமவெளி படத்தில் மாமனாருடன் தொடர்பு வைத்திருக்கும் சர்ச்சை படத்தில் நடித்ததை அடுத்து சமீபத்திய வெப் தொடரில் முத்த வயது ஆணுடன் உறவு வைக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.