என் கூட நடிக்க தமிழ் நடிகைகள் ரெடியா இல்லை..ஆனால் மலையாள ஹீரோயின்ஸ்!! கென் கருணாஸ்..

Gossip Today Tamil Actress Actress
By Edward Feb 26, 2026 09:00 AM GMT
Report

கென் கருணாஸ்

நடிகர் கருணாஸின் மகனான கென் கருணாஸ், அசுரன் படத்தில் தனுஷின் மகனாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். அப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்தார் கென். தற்போது யூத் என பெயரிடப்பட்ட படத்தை இயக்கி நடித்துள்ளார் கென் கருணாஸ்.

என் கூட நடிக்க தமிழ் நடிகைகள் ரெடியா இல்லை..ஆனால் மலையாள ஹீரோயின்ஸ்!! கென் கருணாஸ்.. | Tamil Heroines Refused To Act With Me Ken Says

இப்படம் வரும் மார்ச் 19 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ்யாகவுள்ள நிலையில், படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் கென் மற்றும் படத்தின் ஹீரோயின் அனிஷ்மா அனில்குமார் பேட்டியொன்றில் கலந்து கொண்டு படம் உருவானது பற்றி பகிர்ந்துள்ளார்.

தமிழ் நடிகைகள்

அதில், என்னிடம் நிறைய பேர் ஏன் நீங்கள் உங்கள் படத்திற்கு மலையாள சினிமாவை சேர்ந்த நாயகிகளை நடிக்க வைத்தீர்கள் என்று கேட்பார்கள். ஆனால் தமிழில் எந்த ஹீரோயினும் என்னுடன் நடிக்க தயாராக இல்லை. நிறைய ஹீரோயின்களை நான் நடிக்க வைக்க முயன்றேன், இப்போது படம் நடித்துக் கொண்டிருக்கும் இளம் வயது நடிகைகளிடம் கூட கேட்டுப்பார்த்தேன்.

என் கூட நடிக்க தமிழ் நடிகைகள் ரெடியா இல்லை..ஆனால் மலையாள ஹீரோயின்ஸ்!! கென் கருணாஸ்.. | Tamil Heroines Refused To Act With Me Ken Says

யாருமே என்னுடன் நடிக்க தயாராக இல்லை. அதேசமயம், நான் சொல்லும் கேரக்டரில் நடிக்கவும் தயாராக இல்லை. நான் ஏன் அந்த கேரக்டரில் நடிக்க வேண்டும், இந்த ரோல் பண்ணட்டுமா என்று கேட்பார்கள். ஆனால் மலையாள சினிமாவை சேர்ந்தவர்களுக்கு ஈகோ என்பதே இல்லை.

கதை சொல்லும்போதே, அவர்தான் படத்தின் ஹீரோயின் நீங்கள் இல்லை என சொன்னால் பரவாயில்லை என கேரக்டர் பிடித்திருக்கிறது என்று நடிக்க வருகிறார்கள். இப்படி நான் ஹீரோயின் தேடிக்கொண்டிக்கும்போது சிறை படத்தின் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரிடம் ஒருநாள் புமபுவதற்காக சென்றேன்.

அவரிடம் என் படத்திற்கு ஹீரோயின் கிடைக்கவில்லை, கேட்குற ஹீரோயினும் நடிக்க மாட்டேங்குறாங்க என்று சொன்னேன். அவர் அதைக்கேட்டு சிறை படத்தில் இடம் பெற்ற நீலோத்தி பாடலை காட்டினார்.

என் கூட நடிக்க தமிழ் நடிகைகள் ரெடியா இல்லை..ஆனால் மலையாள ஹீரோயின்ஸ்!! கென் கருணாஸ்.. | Tamil Heroines Refused To Act With Me Ken Says

அனிஷ்மா

அதில் அனிஷ்மாவை பார்த்து இந்த பொண்ணு சூப்பரா நடிக்கிறாங்க, என் படத்தில் நடிப்பாங்களான்னு கேட்டு சொல்லுங்கள் என்று கூறினேன். அவர் அதைக்கேட்டு இவரைப்பற்றி ஏகப்பட்ட பில்டப் கொடுத்தார். கண்ணாலேயே நடிப்பாங்க என்றெல்லாம் சொன்னார்.

சரியென நானும் நேரில் சந்தித்து கதையை சொன்னேன். பார்த்தால் அவர் குரல் குழந்தை மாதிரி இருந்தது. இருந்தாலும் முழு கதையை கேட்டுவிட்டு ரொம்ப நல்லா இருக்கு, எனக்கு 2 நாட்கள் டைம் வேண்டும் என்று கேட்டு அடுத்த நாளே ஓகே சொன்னார் அனிஷ்மா என்று கென் கருணாஸ் தெரிவித்துள்ளார்.