மூளையில் எதுவும் இல்லாத விஜய்!! முட்டாளால் மக்கள் ஏமாறுவார்கள்!! முன்னாள் நீதிபதி காட்டம்..
தவெக விஜய்
தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்க 118 இடங்களை தவெக தலைவரும் நடிகருமான விஜய் தற்போது பெற்றுள்ளார். கடைசியாக விசிக கட்சியின் 4 தொகுதிகள் கிடைத்துள்ள நிலையில், பெரும்பான்மையை விஜய் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தவெக விஜய்யை பலரும் விமர்சித்து பேசி வரும் நிலையில், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு கடுமையாக விமர்சித்து இணையத்தில் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மார்கண்டேய கட்ஜு
அதில், தமிழ்நாட்டின் மாபெரும் சமூக - பொருளாதார பிரச்சனைகளை தீர்ப்பது எப்படி என்ற மூளையில் எதுவும் இல்லாத சினிமா நடிகரும் மக்களை தூண்டிவிடும் பேச்சாளருமான விஜய் அடுத்த முதல்வராக ஆகப்போகிறார்.
தமிழர்கள் விரைவில் இந்த முட்டாளால் ஏமாற்றமடைவார்கள். ஹரி ஓம் என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து தவெகவினர் அவரின் கடுமையாக விமர்சனத்தை எதிர்த்து கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் மார்கண்டேய கட்ஜூ தன்னுடைய கருத்தை திரும்ப பெற்று அந்த பதிவினை டெலீட் செய்துள்ளார்.