வீட்டு வேலை பார்க்கும் பெண்..மறக்கமுடியாத செயல் செய்த ஓனர்!! தமிழா தமிழா-ல் நடத சம்பவம்..

Zee Tamil Tamil TV Shows TV Program
By Edward Mar 02, 2026 11:30 AM GMT
Report

'தமிழா தமிழா'

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி தாம் 'தமிழா தமிழா'. நெறியாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் கடந்த வார எபிசோட்டில் கடன் பெற்றவர்கள் - தக்க நேரத்தில் உதவியவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்பட்டு பலரையும் நெகிழவைத்தது. குறிப்பாக மேடையில் பேச வந்த ஒரு பெண் பகிர்ந்து அனுபவம் தான் கண்கலங்க வைத்துள்ளது.

வீட்டு வேலை பார்க்கும் பெண்..மறக்கமுடியாத செயல் செய்த ஓனர்!! தமிழா தமிழா-ல் நடத சம்பவம்.. | Tamizha Tamizha Episode Leaves Viewers Emotional

அந்த பெண் ஒரு வீட்டில் வேலை செய்கிறார். ஆனால் அவர் பேசிய விதத்தில் அந்த வீடு அவருக்கு வேலை இடம் மாதிரி இல்லை, அவரே அக்குடும்பத்தில் ஒருவராக இருந்த உணர்வு தெரிந்தது. அவ்வீட்டில் குழந்தைகளை கவனிப்பது, சாப்பாடு செய்வது தான் அவரது வேலை. ஆனால் மற்ற வீடுகளை போல் வேலைக்காரி என்ற பார்வை இல்லாம் நம்ம வீட்டுப்பெண் என்ற உரிமையோடு நடத்தினார்கள்.

எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவார்கள். அவருடைய வீட்டுக் கஷ்டங்களை கேட்டு தெரிந்து கொள்வார்கள். தேவையான நேரங்களில் ஆறுதல் கூறுவார்கள் என்று அவர் சொன்னபோது மேடையே அமைதியாகிவிட்டது.

ஒருநாள் வீட்டில் அனைவரும் பேசிக்கொண்டிருந்தபோது, வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மகள், அந்த வீட்டிற்கு வந்து, ஆண்ட்டி, எங்க பாட்டிக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னதாக அப்பெண் கூறினார்.

வீட்டு வேலை பார்க்கும் பெண்..மறக்கமுடியாத செயல் செய்த ஓனர்!! தமிழா தமிழா-ல் நடத சம்பவம்.. | Tamizha Tamizha Episode Leaves Viewers Emotional

அதை கேட்டவுடன் அந்த வீட்டில் இருந்த அம்மா, அவரை அழைத்து, நாங்கள் உன்னை எப்போதாவது பிரித்து பார்த்திருக்கிறோமா, இப்படியொரு பெரிய விஷயத்தை எங்களிடம் சொல்லாமல் இருந்திருக்கே? என்று உரிமையோடு கண்டித்ததோடு, உடனே அப்பெண்ணின் அம்மாவை மருத்துவமனையில் சேர்த்து 1 லட்சம் ரூபாய்க்கும் மேல் மருத்துவ செலவையும் செலுத்தினார்கள் என்று உருக்கமாக அப்பெண் மேடையில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் பேசியதும் அங்கிருந்தவர்கள் முதல் பார்வையாளர்கள் வரை கண்கலங்க வைத்திருக்கிறது.