கொடுமை படுத்துகிறார்கள்.. கதறி அழுது வீடியோ வெளியிட்ட விஷால் பட நடிகை தனுஸ்ரீ தத்தா..

Actress
By Kathick Jul 23, 2025 03:30 AM GMT
Report

தனுஸ்ரீ தத்தா

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஷால் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தீராத விளையாட்டு பிள்ளை. இப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தவர் நடிகை தனுஸ்ரீ தத்தா.

கொடுமை படுத்துகிறார்கள்.. கதறி அழுது வீடியோ வெளியிட்ட விஷால் பட நடிகை தனுஸ்ரீ தத்தா.. | Tanushree Dutta Crying Video Viral On Net

இவர் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஆவார். Chocolate: Deep Dark Secrets, Aashiq Banaya Aapne, Speed ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கதறி அழுத நடிகை

சில வருடங்களுக்கு முன்பு அவர் நடிகர் நானா படேகர் மீது, metoo புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்நிலையில் நடிகை தனுஸ்ரீ தத்தா, தான் 2018ல் metoo புகார் சொன்னதில் இருந்து தன்னை வீட்டுக்கு அருகில் இருப்பவர் கொடுமை படுத்துகிறார்கள் என புகார் கூறி இருக்கிறார்.

கொடுமை படுத்துகிறார்கள்.. கதறி அழுது வீடியோ வெளியிட்ட விஷால் பட நடிகை தனுஸ்ரீ தத்தா.. | Tanushree Dutta Crying Video Viral On Net

கண்ணீருடன் அவர் கதறி அழுது, இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. இதோ அந்த வீடியோ..