சூட்டிங்கில் ஆடையில்லாமல் ஆட சொன்ன இயக்குநர்!! விஷால் பட நடிகை ஓபன் டாக்..
தனுஸ்ரீ தத்தா
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஷால் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தீராத விளையாட்டு பிள்ளை. இப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஆவார்.
Chocolate: Deep Dark Secrets, Aashiq Banaya Aapne, Speed ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு அவர் நடிகர் நானா படேகர் மீது, metoo புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

தான் 2018ல் metoo புகார் சொன்னதில் இருந்து தன்னை வீட்டுக்கு அருகில் இருப்பவர் கொடுமை படுத்துகிறார்கள் என புகார் கூறினார்.
ஆடையில்லாமல்
சமீபத்தில் தனுஸ்ரீ தத்தா அளித்த பேட்டியொன்றில், ஒரு இயக்குநர் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். சூட்டிங்கின் போது உங்கள் ஆடைகளை களைந்துவிட்டு நடனமாடுங்கள் என்று இயக்குநர் கூறினார். அப்போது நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன்.
அங்கே படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களும் இயக்குநரின் பேச்சால் அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்தவர்கள் என்னை ஆதரித்தனர். இதனால் இயக்குநர் அதன்பின் அப்படி பேசவில்லை, அமைதியாகிவிட்டார் என்று நடிகை தனுஸ்ரீ தெரிவித்திருக்கிறார்.